சாத்தான்குளத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


சாத்தான்குளத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x

சாத்தான்குளத்தில் ஒருதலையாக காதலித்த இளம்பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் முடிந்ததால் மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து செய்து கொண்டார்.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளத்தில் ஒருதலையாக காதலித்த இளம்பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் முடிந்ததால் மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து செய்து கொண்டார்.

ஒரு தலைக்காதல்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள மாவடியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் திருப்பதிராஜா (வயது 25). பனை ஏறும் தொழிலாளி. இவர் தற்போது சாத்தான்குளம் காமராஜ்நகரில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் திருப்பதிராஜா, மாவடியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இளம்பெண் அவரது காதலை ஏற்கவில்லையாம்.

விஷம் குடித்தார்

மேலும், அந்த இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர் வேறொருவருடன் திருமணம் நிச்சயித்து, சமீபத்தில் திருமணம் முடிந்துள்ளது. இதனால் விரக்தி அடைந்து காணப்பட்ட திருப்பதிராஜா, கடந்த 12-ந்தேதி சாத்தான்குளத்தில் விஷம் குடித்துவிட்டு, உடன்குடிக்கு சென்று அங்கு வசித்து வரும் உறவினர் சுயம்புலிங்கம் (26) என்பவருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வீட்டிலேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் சாவு

பதறிப்போன சுயம்புலிங்கம், அவரை அக்கம் பக்கத்தினர் துணையுடன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து அவர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story