தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

கிருஷ்ணராயபுரம் அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

குடும்ப பிரச்சினை

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள வளையல்காரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தங்கபாப்பா. இந்ததம்பதியின் மகன் அருண்குமார் (வயது 27). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த அபிநயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அருண்குமார்-அபிநயா கரூரில் தனியாக வீடு எடுத்து தங்கி அப்பகுதியில் கூலி வேலைக்கு சென்று வந்தனர். இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்றும் அருண்குமாருக்கும், அபிநயாவுக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அபிநயா தனது கணவருடன் கோபித்து கொண்டு தனது தாய் வீடான வளையல்காரன்புதூருக்கு சென்று விட்டார்.

தற்கொலை

இதனால் மனமுடைந்து காணப்பட்ட அருண்குமார் தனது சொந்த ஊரான வளையல்காரன்புதூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் 100 நாள் வேலைக்கு சென்ற தங்கபாப்பா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மகன் அருண்குமார் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து மாயனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story