தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
முத்தையாபுரத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் சுபாஷ்நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் மகாராஜன் (வயது 34). இவர் தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்தில் துப்புரவாளராக வேலை பார்த்து வந்தார். தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தீயணைப்பு நிலையத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதனால் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story