தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தட்டார்மடம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

குமரி மாவட்டம் கோட்டவிளை சாஸ்தான்கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜப்பா மகன் பிரபு (வயது 36). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவர் சாத்தான்குளம் அருகே புத்தன்தருவை பெருமாள்நகரில் உள்ள தனது சகோதரர் ராஜேஷ் என்பவரது வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். பிரபுவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் பிரபுவை அவரது உறவினர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரபு நேற்று முன்தினம் தனது சகோதரர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது தந்தை ராஜப்பா, தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story