தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

கும்மிடிப்பூண்டி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள ஏ.என்.குப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர் அசோகன் (வயது 49). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி யசோதா (43) என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். கடந்த 8-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சித்த தாக கூறப்படுகிறது. உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அசோகன், நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கூலித்தொழிலாளி அசோகனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story