கடன் சுமையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
ஜோலார்பேட்டை அருகே கடன் சுமையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஜோலார்பேட்டை அருகே உள்ள வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பசுபதி (வயது 47). இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வேலைக்காக வெளிநாட்டுரக்கு சென்றார். அப்போது தன்னிடம்பணம் இல்லாததால் சிலரிடம் கடன் வாங்கிக்கொண்டு சென்றுள்ளார்.அங்கு சரியான வேலை இல்லாமல் இருந்துள்ளார். இதனால், 2 வருட ஒப்பந்தத்தில் சென்ற அவர் ஒரே வருடத்தில் ஊருக்கு வந்துவிட்டார். ஊருக்கு வந்த பிறகும் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கடன் சுமை அதிகமானது.
இதன் காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்து மது போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது மனைவி இந்துமதி கொடுத்து புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.