கடன் பிரச்சினையால் தொழிலாளி தற்கொலை


கடன் பிரச்சினையால் தொழிலாளி தற்கொலை
x

கடன் பிரச்சினையால் தொழிலாளி தற்கொலை

விருதுநகர்

சிவகாசி

சிவகாசி-விளாம்பட்டி ரோட்டில் உள்ள ஒத்தப்புளி பகுதியை சேர்ந்தவர் முனியசாமி (வயது 40). இவர் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 லட்சம் கடன் வாங்கி உள்ளார். பின்னர் அந்த கடனை சிறிது, சிறிதாக திருப்பி செலுத்தி வந்துள்ளார். இன்னும் 2 வருடம் கடனை அடைக்க வேண்டிய நிலையில் கடன் பிரச்சினையால் மனமுடைந்த முனியசாமி வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் அம்மாபட்டி கண்மாய்கரையில் உள்ள கருப்பசாமி கோவில் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டுக்கு வந்த முனியசாமி தான் விஷம் குடித்த தகவலை தனது மனைவி காளீஸ்வரியிடம் கூறி உள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story