விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
ராணிப்பேட்டை
வாலாஜா
வாலாஜாவை அடுத்த வாங்கூர் பஸ் நிறுத்தம் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 46), தொழிலாளி.
இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.
இதனால் மனவேதனையில் இருந்து வந்த அவர் கடந்த ஜூன் மாதம் 29-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு மயக்கமடைந்து கிடந்தார்.
அவரை, குடும்பத்தினர் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி ஆனந்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story