பூட்டிய வீட்டிற்குள் தொழிலாளி பிணம்


பூட்டிய வீட்டிற்குள் தொழிலாளி பிணம்
x

பூட்டிய வீட்டிற்குள் தொழிலாளி பிணம்

கன்னியாகுமரி

குளச்சல்:

குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளையை சேர்ந்தவர் அருள்பாபி (வயது48), தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. இவர் கடந்த ஆண்டு சாஸ்தாங்கரை பகுதியில் சொந்தமாக வீடு கட்டி தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் அருள்பாபி கடந்த 3 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் அவரது நண்பர்கள் நேற்று வீட்டுக்கு தேடிச் சென்றனர். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் இதுபற்றி குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையிலான போலீசார் சம்பவத்துக்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அருள்பாபி கட்டிலின் கீழே பிணமாக கிடந்தார். அவரது நெற்றியில் ரத்த காயம் இருந்தது. மேலும், அவரது உடலின் அருகில் மதுபாட்டில், மிக்சர் பொட்டலம் போன்றவை இருந்தன. இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்பாபி அதிக போதையில் இறந்தாரா? அல்லது கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story