சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பலி
கூடலூர் அருகே சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.
கூடலூர் அரிசன காலனியை சேர்ந்தவர் அய்யர் (வயது 65). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், கூடலூரில் இருந்து மோட்டார்சைக்கிளில் கம்பத்திற்கு சென்று கொண்டிருந்தார் கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் துர்க்கை அம்மன் கோவில் அருகே வந்தபோது, கேரள மாநிலத்திற்கு வாழைத்தார்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம் இவரது மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அய்யர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வாகன டிரைவரான ஓடைப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.