சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி


சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி
x

நொய்யல் அருகே சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலியான வழக்கில் தனியார் வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

தொழிலாளி

திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரப்பட்டு அருகே மேட்டூர் தானிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). இவர் கடந்த 4 மாதங்களாக கரூர் மாவட்டம், அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அன்புநாதன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் செல்வம் தனது சைக்கிளில் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்று கொண்டிருந்தார்.

கார் மோதல்

அப்போது பின்னால் மண்மங்கலம் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வரும், சேலம் வாழப்பாடி அருகே உள்ள வேலூர் வ.உ.சி. தெருவை சேர்ந்த சக்கரவர்த்தி (33) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக செல்வம் ஓட்டிச்சென்ற சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வம் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

தனியார் வங்கி மேலாளர் கைது

இதையடுத்து படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிந்து, காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய தனியார் வங்கி மேலாளர் சக்கரவர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story