அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி சாவு


அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி சாவு
x

திசையன்விளையில் அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி இறந்தார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள பூச்சிக்காட்டை சேர்ந்தவர் மாரிமுத்து என்பவருடைய மகன் இசக்கிமுத்து (வயது 45). தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று காலை திசையன்விளை உடன்குடி ரோட்டில் உள்ள மதுபான கடை அருகில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அய்யாத்துரை, திசையன்விளை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story