கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி


கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 14 May 2023 12:15 AM IST (Updated: 14 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி பலி

மயிலாடுதுறை நகரம் காந்திஜி சாலையில் அப்துல் மாலிக் என்பவருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 11 பேர் அங்கேயே தங்கியிருந்து கட்டுமான பணி வேலை செய்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் கட்டுமான பணி முடிவடைந்து இரவில் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றுள்ளனர். அப்போது மேற்குவங்கம் காஜல் மாட்டாவை சேர்ந்த மித்து(வயது 48) என்பவர் செல்போனில் பேசிக்கொண்டு முதல்தளம் சென்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை கட்டுமான தொழிலாளிகள் தூங்கி எழுந்து பார்த்தபோது மித்து, லிப்ட் பகுதியில் இறந்து கிடந்துள்ளார்.அருகிலேயே செல்போன் கிடந்தது.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மித்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தொழிலாளிகளிடம் நடத்திய விசாரணையில் முதல் தளத்திலிருந்து தவறி கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரியவந்தது. ஆனாலும் போலீசார் பல்வேறு கோணங்களில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச்சம்பவம் மயிலாடுதுறை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story