பஸ்சில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
பட்டுக்கோட்டை அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
பஸ்சில் இருந்து தவறி விழுந்தார்
சிவகங்கை மாவட்டம் திருவாடானை பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது45). தொழிலாளி. இவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பட்டுக்கோட்டையில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் அரசு பஸ்சில் வேலைக்கு செல்வதற்காக சென்றார். பட்டுக்கோட்டையை அடுத்த துவரங்குறிச்சி முக்கூட்டுச் சாலை பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது பஸ்சில் இருந்து காளிதாஸ் தவறி விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டது.
சிகிச்சை பலனின்றி சாவு
அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவருடைய மனைவி ரேகா பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.