தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
தேவதானப்பட்டி அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.
தேனி
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள ஜி.தும்மலபட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 35). தென்னை மரம் ஏறும் தொழிலாளி. இவர் நேற்று தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு மரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொண்டிருந்த முருகேசன், எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த முருகேசனை தோப்பில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே முருகேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story