மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து தொழிலாளி பலி
எடப்பாடி:-
எடப்பாடி நகராட்சி எல்லைக்குட்பட்ட சின்னமணலி மேற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 32). கூலித்தொழிலாளியான இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் எடப்பாடி அடுத்த கவுண்டம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது கவுண்டம்பட்டி முனியப்பன் கோவில் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுரேந்தர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். அப்பகுதியாக வந்தவர்கள் அவரை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்து எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த சுரேந்தருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.