கல்லாமொழி அனல் மின்நிலையத்தில் டவரிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு


கல்லாமொழி அனல் மின்நிலையத்தில் டவரிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

பீகார் மாநிலம் குருவலிலா அய்யப்பதாகி பகுதியைச் சேர்ந்த ரேக்கலா மகன் அணில்குமார் (வயது 22). தொழிலாளி. இவர் கல்லாமொழி அனல்மின் நிலைய வளாகத்தில் வெல்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 27-ந்தேதி அங்கு அமைக்கப்பட்டு வரும் ஒரு டவரில் 9-வதுதளத்தில் வெல்டிங் வேலை செய்துவிட்டு ஏணி வழியாக கீழே இறங்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை சக தொழிலாளிகள் மீட்டு திருச்செந்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக நெல்லை தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story