ரெயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி


ரெயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 4 Jan 2023 12:15 AM IST (Updated: 4 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் எதிரே உள்ள ெரயில்வே தண்டவாள பகுதியில் ஆண் பிணம் கிடப்பதாக, நேற்று தூத்துக்குடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டு அருண்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அவர் வைத்திருந்த ஆதார் கார்டு மற்றும் தொழிலாளர் சங்க புகைப்பட அடையாள அட்டையை பார்த்ததில், நாகர்கோவில் வடசேரி ஆராட்டு ரோடு பகுதியைச் சேர்ந்த சற்குணம் மகன் நமச்சிவாயம் (வயது 41) என்பதும், செட்டிகுளம் சந்திப்பில் பாரம் ஏற்றி இறக்கும் மற்றும் கைவண்டி இழுக்கும் தொழிலாளி என்பதும் தெரிய வந்தது.

இவர் முன் பதிவு செய்யப்படாத தஞ்சை- மதுரை மற்றும் திண்டுக்கல்- நாகர்கோவில் ெரயில் டிக்கெட் வைத்துள்ளார். நேற்று அதிகாலையில் ெரயில் கோவில்பட்டி ரெயில் நிலையத்தை நெருங்கும் போது, தவறி விழுந்து பலியாகி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். நமச்சிவாயம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story