கிணற்றில் தவறிவிழுந்து தொழிலாளி பலி


கிணற்றில் தவறிவிழுந்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 22 Oct 2022 12:30 AM IST (Updated: 22 Oct 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் தவறிவிழுந்து தொழிலாளி பலியானார்.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி அடுத்த நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் வஜ்ஜிரவேல் (வயது 42), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி பழனி என்பவரின் விவசாய கிணற்றில் விழுந்தார். அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் கிணற்றில் இருந்து அவரை மீட்டனர். பின்னர் தலையில் பலத்த காயம் அடைந்திருந்த அவரை உடனடியாக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி வஜ்ஜிரவேல் இறந்தார். இதுகுறித்து பொம்மிடி போலீசில் வஜ்ஜிரவேலின் மனைவி சாலம்மாள் கொடுத்த புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story