கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிற்சாலை எந்திரத்தில் சிக்கி தொழிலாளி சாவு


கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிற்சாலை எந்திரத்தில் சிக்கி தொழிலாளி சாவு
x

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் எந்திரத்தில் சிக்கிய தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு தொழிற்சாலை உள்ளது. இங்கு பீகாரைச்சேர்ந்த மனோஜ் சாடா (வயது 38) என்பவர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, தானியங்கி வெல்டிங் எந்திரத்தில் எதிர்பாராத விதமாக சிக்கியதில் இடுப்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்தில் தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர் பாலு நேரில் ஆய்வு செய்தார். இந்த விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story