மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி


மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
x

மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.

கரூர்

கரூர் அருகே உள்ள ஆத்தூர் பிரிவு சுந்தரம் நகரை சேர்ந்தவர் முருகவேல் (வயது 43), கூலி தொழிலாளி. இவர் ஆத்தூர் பால் பூத் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த முருகவேலை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு காந்தி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முருகவேல் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து டவுன் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story