விபத்தில் தொழிலாளி சாவு
ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கான்சாபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). பால் கறக்கும் தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் காந்திநகர் செல்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை ரோட்டில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பஸ் மோதியதில் மணிகண்டன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி சின்னம்மாள் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் அய்யப்பன் (36) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story