தொழிலாளி மர்ம சாவு
தேனி அருகே மர்மமான முறையில் தொழிலாளி ஒருவர் இறந்து கிடந்தார்.
தேனி
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி ஜவகர் நகரை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 55). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர் தனது உறவினருக்கு சொந்தமான இடத்தை சுத்தம் செய்ய சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அவருடைய மகன் தினேஷ்குமார் தனது உறவினர் இருளப்பராஜாவுடன் சேர்ந்து பாண்டியனை தேடிச் சென்றனர். அப்போது வாழையாத்துப்பட்டியில் அவர் முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனால், தனது தந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் தினேஷ்குமார் புகார் செய்தார். போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story