தொழிலாளி மர்ம சாவு
சிவகாசியில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி நேரு காலனியை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 40). சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். சரவணக்குமார் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்ததால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் கணவனைவிட்டு பிரிந்து விஜயலட்சுமி தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் சிவகாசி ஸ்ரீமதிநகரில் சரவணக்குமார் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக விஜயலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story