தொழிலாளி பாம்பு கடித்து சாவு


தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-24T00:15:50+05:30)

காயாமொழியில் தொழிலாளி பாம்பு கடித்து இறந்து போனார்.

தூத்துக்குடி

காயாமொழி:

திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலுமூலைக்கிணறு அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் துரைப்பாண்டி மகன் சந்திரசேகர் (வயது 40). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதியம் காயமொழியில் உள்ள ஒரு தோட்டத்தில் புல் அறுக்க சென்றுள்ளார். மாலை 5 மணி வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது அண்ணன் பாலகிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் சந்திரசேகரை தேடி தோட்டத்திற்கு சென்றுள்ளனர். அப்போது தோட்டத்தில் சந்திரசேகர் பாம்பு கடித்து இறந்து கிடந்துள்ளார். அவரது இடது கால் முட்டுக்கு கீழ் பகுதியில் பாம்பு கடித்தற்கான அடையாளம் இருந்துள்ளது. இது குறித்து பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story