தொழிலாளி விஷம் குடித்து சாவு


தொழிலாளி விஷம் குடித்து சாவு
x

நெல்லை டவுனில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை டவுனை அடுத்த கரிக்காதோப்பு, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகவேலு. இவருடைய மகன் கண்ணன் (வயது 47.) இவரது மனைவி பிரியா (42). 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கண்ணன் சென்ட்ரிங் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 9-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story