தடுப்பணையில் மூழ்கி தொழிலாளி சாவு


தடுப்பணையில் மூழ்கி தொழிலாளி சாவு
x

கிருஷ்ணாபுரம் அருகே தடுப்பணையில் மூழ்கி தொழிலாளி இறந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தர்மபுரி

தடுப்பணையில் பிணம்

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 55). தொழிலாளி. இவர் பந்தாரஅள்ளி பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் காணவில்லை. இந்த நிலையில் நாகசமுத்திரம் தடுப்பணையில் முதியவர் பிணம் மிதந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கிருஷ்ணாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முருகன் என்பதுதெரியவந்தது.

வழக்குப்பதிவு

இதுகுறித்து முருகனின் குடும்பத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து உடலை பார்த்்து கதறி அழுதனர்.

பின்னர் போலீசார், முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் முருகன் தடுப்பணையில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story