ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி


ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி
x

ஏரியில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடிபள்ளத்தெருவை சேர்ந்தவர் பரகத்துல்லா (வயது 47), தொழிலாளி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கை, கால் செயல் வராமல் சிரமப்பட்டு வந்தார். இந்தநிலையில் சின்னவளையம் அரங்கநேரி படித்துறையில் கால் கழுவுவதற்காக சென்றவர் எதிர்பாராதவிதமாக ஏரியில் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Related Tags :
Next Story