ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு


ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு
x

ஏரியில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தெற்கு காலனி தெருவை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 43), கூலி தொழிலாளி. இவரது மனைவி இறந்து விட்டதால் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று வட்டக்குளம் ஏரியில் குளிக்க சென்ற தங்கமுத்து ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தங்கமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story