ஊருணியில் மூழ்கி தொழிலாளி சாவு
திருப்புவனம் அருகே ஊருணியில் மூழ்கி தொழிலாளி இறந்தார்.
திருப்புவனம்,
மதுரை மாவட்டம், பனையூரை சேர்ந்தவர் அடைக்கன்(வயது 60).கூலி தொழிலாளி. இவர் திருப்புவனம் அருகே சாய்னாபுரத்தில் உள்ள ஊருணிக்கு நேற்று முன்தினம் குளிக்க சென்றார். அப்போது அவர் நீரில் மூழ்கி விட்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் அனுப்பானடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரை தேடினார்கள். நீண்ட நேரமாக தேடியும் அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரமாகி விட்டதால் மறுநாள் உடலை தேடுவதாக கூறி விட்டு தீயணைப்பு வீரர்கள் சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் ஊருணியில் அனுப்பானடி, தல்லாக்குளம் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.மீட்பு பணியில் திருப்புவனம் தாசில்தார் கண்ணன் தலைமையில் வருவாய் துறையினரும் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை அடைக்கன் உடலை தீயணைப்பு வீரர்கள் வெளியே எடுத்தனர். அதன்பின்னர் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ், இறந்த அடைக்கன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்.