பரங்கிப்பேட்டை அருகே பந்தல் போடும்போது தவறி விழுந்த தொழிலாளி சாவு
பரங்கிப்பேட்டை அருகே பந்தல் போடும்போது தவறி விழுந்த தொழிலாளி உயிாிழந்தாா்.
கடலூர்
பரங்கிப்பேட்டை,
பரங்கிப்பேட்டை அருகே உள்ள கொத்தட்டை கூத்தாண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி(வயது 45), பந்தல் போடும் தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சங்குப்பம் கிராமத்தில் பந்தல் போடும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story