குளத்தில் சகதியில் சிக்கி தொழிலாளி சாவு
அஞ்சுகிராமம் அருகே குளத்தில் சகதியில் சிக்கி தொழிலாளி சாவு
கன்னியாகுமரி
அஞ்சுகிராமம்,
நெல்லை மாவட்டம் காவல்கிணற்றை சேர்ந்தவர் நிக்சன் (வயது40), தொழிலாளி. இவருக்கு ஷீலா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நிக்சன் நேற்று காலையில் அஞ்சு கிராமம் அருகே உள்ள அழகப்பபுரம், செட்டிகுளத்தில் நண்பர் ஒருவருடன் வலை போட்டு மீன் பிடிக்க வந்தார். அங்கு வலையில் சிக்கிய மீன்களை மூடையில் கட்டி கரைக்கு கொண்டு வருவதற்காக நீந்தி வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக குளத்தில் சகதியில் சிக்கி மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிக்சனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story