கார் மோதி தொழிலாளி படுகாயம்
தியாகதுருகம் அருகே கார் மோதி தொழிலாளி படுகாயம்
கள்ளக்குறிச்சி
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் கோவிந்தபக்தர் தெருவை சேர்ந்தவர் லோகநாதன்(45). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தியாகதுருகத்தில் இருந்து எலவனாசூர்கோட்டைக்கு மொபட்டில் சென்றுகொண்டிருந்தார். பெரியமாம்பட்டு அருகே சென்றபோது பின்னால் வந்த கார் லோகநாதன் ஓட்டிவந்த மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த லோகநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சேலம், காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் கார்த்திக்(33) என்பவர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story