சாயநீர் கொட்டியதில் காயம் அடைந்த தொழிலாளி சாவு
சாயநீர் கொட்டியதில் காயம் அடைந்த தொழிலாளி இறந்தார்.
சேலம்
அன்னதானப்பட்டி:
சேலம் கருங்கல்பட்டி இந்திரா நகர் 6-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 52). இவர் தாதகாப்பட்டி திருஞானம் நகரில் உள்ள சாயப்பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 7-ந் தேதி வேலைபார்த்து கொண்டிருந்த போது, பாய்லரில் கொதித்து கொண்டிருந்த சாயநீர் எதிர்பாராதவிதமாக அவரது உடல் மீது கொட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரியானூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நாகராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story