மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி படுகாயம்


மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி படுகாயம்
x

தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

தூத்துக்குடி

ஸ்பிக் நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ் (வயது 48). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று ஸ்பிக் நகர் பகுதியில் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சிவராஜ் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு, சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சிவராஜின் மனைவி சாந்தி முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story