வாகனம் மோதி காயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு


வாகனம் மோதி காயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
x

வாகனம் மோதி காயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வேலூர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் சிவன். இவரது மகன் விஜய் (வயது 33). வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்த இவர் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விஜய் படுகாயம் அடைந்துள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு விஜய் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விஜய் மீது மோதிய வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story