லாரி மோதி தொழிலாளி பலி


லாரி மோதி தொழிலாளி பலி
x

சங்ககிரி அருகே லாரி மோதி தொழிலாளி இறந்தார்.

சேலம்

சங்ககிரி:

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 32). தொழிலாளி. இவர் நேற்று காலை 7 மணிக்கு பவானி நோக்கி தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சங்ககிரி அருகே பச்சகாடு பகுதியில் சென்ற போது, அந்த வழியாக வந்த டாரஸ் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த சின்னதுரையை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னதுரை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story