ஜவ்வாதுமலையில் இரும்பு ராடால் அடித்து தொழிலாளி கொலை


ஜவ்வாதுமலையில் இரும்பு ராடால் அடித்து தொழிலாளி கொலை
x
தினத்தந்தி 3 July 2022 10:42 PM IST (Updated: 4 July 2022 12:46 PM IST)
t-max-icont-min-icon

காதல் திருமணம் மற்றும் முன்விரோதம் காரணமாக தொழிலாளி இரும்பு ராடால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்

காதல் திருமணம் மற்றும் முன்விரோதம் காரணமாக தொழிலாளி இரும்பு ராடால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரை நடத்தி வருகின்றனர்.

முன்விரோதம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை நெல்லி வாசல்நாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 25), கூலித் தொழிலாளி. இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தியின் அத்தை மகள் மலர்கொடியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனால் தட்சிணாமூர்த்தி குடும்பத்துக்கும், முருகேசன் குடும்பத்துக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் முருகேசனின் அண்ணன் விஸ்வநாதன் (27) தனது நண்பர்களுடன் திருப்பத்தூர் மாவட்ட எல்லையில் உள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் டாஸ்மாக் கடையில் மது அருந்தி உள்ளார். அப்போது தட்சிணாமூர்த்தி அவரது தம்பி அருண்குமார், மைத்துனர் துக்கன் ஆகியோரும் அதே டாஸ்மார்க் கடையில் மது குடித்து உள்ளனர்.

அடித்துக்கொலை

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரம் அடைந்த தட்சிணாமூர்த்தி, அவரது தம்பி அருண்குமார், தந்தை உத்தரவேடி, மைத்துனர் துக்கன், ஆகிய நான்கு பேரும் சேர்ந்து விஸ்வநாதனை இரும்பு ராடு, உருட்டுக் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த விஸ்வநாதனை உறவினர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஸ்வநாதன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசில் முருகேசன் அளித்த புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விஸ்வநாதன் மீது தாக்குதல் நடத்திய 4 பேரை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.


Next Story