அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
விளாத்திகுளம் அருகே அரசு பஸ் மோதி தொழிலாளி பலியானார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கிராமத்தை சேர்ந்தவர் செல்வ மகாலிங்கம் (வயது 26). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு குளத்தூரில் இருந்து வேம்பாருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கே.சண்முகபுரம் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது காரைக்குடியில் இருந்து திருச்செந்தூர் சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே செல்வ மகாலிங்கம் பரிதாபமாக இறந்தார்.
மேலும் விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற அரசு பஸ்சை குளத்தூர் போலீசார் உதவியுடன் சூரங்குடி போலீசார் குளத்தூரில் வைத்து மடக்கிப் பிடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் பகுதியை சேர்ந்த பிரபு (36), சிவகங்கை மாவட்டம் பெரிய கண்ணூர் பகுதியைச் சேர்ந்த பாபு தாஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.