கோவில்பட்டியில் விபத்தில் தொழிலாளி பலி
கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள கூசாலிபட்டி மேட்டு தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் செல்வ குருசாமி (வயது 24). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு சாத்தூர் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் ஊர் திருப்பிக் கொண்டிருந்தார். கோவில்பட்டி வேலாயுதபுரம் அருகில் வந்தபோது, எதிரே வந்த கோவில்பட்டியில் இருந்து மதுரைக்கு காய்கறி ஏற்றசென்ற மினி லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த செல்வ குருசாமி சம்பவ இடத்திலேயே பரிதாப மாக இறந்தார்.
தகவல் அறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித்ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி லாரி டிரைவரான கோவில்பட்டி சாஸ்திரி நகரை சேர்ந்த ராமசாமி மகன் கணேஷ் பாண்டியன் (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.