மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார்.
நாமக்கல்
பரமத்திவேலூர்:-
பரமத்திவேலூர் அருகே காமாட்சிநகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 75), கூலி தொழிலாளி. இவர், சைக்கிளில் மோகனூர் சாலையை கடக்க முயன்றதாக தெரிகிறது. அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள், ராமசாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமசாமி படுகாயம் அடைந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராமசாமி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிைடயே ராமசாமி மீது மோட்டார் சைக்கிள் மோதியது தொடர்பாக பரமத்தியை சேர்ந்த மணிகண்டன் மகன் லோகேஷ் (20) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story