மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி சாவு


மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
x

மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி சாவு

திருவாரூர்

கோட்டூர் அருகே சாலையோரம் கொட்டி வைத்திருந்த ஜல்லிகற்கள் மீது மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி இறந்தார். இதில் வாலிபர் படுகாயமடைந்தார்.

ஜல்லிகற்கள் மீது மோதியது

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே காரியமங்கலம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் ஜெயபாரதி (வயது30). விக்கிரபாண்டியன் ஏரி தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (55).தொழிலாளி. இவர்கள் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் கம்பங்குடி ஆர்சுக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை ஜெயபாரதி ஓட்டினார். அப்போது சாலையோரத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த ஜல்லிகற்கள் மீது மோட்டார்சைக்கிள் மோதியது.

சாவு

இதில் கீழே விழுந்து 2பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜெயபாரதியை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்தநிலையில் மன்னார்குடி அரசு தலைமை மாவட்ட ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கந்தசாமி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கந்தசாமி மகன் அருள் (35) கோட்டூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story