சாலை விபத்தில் தொழிலாளி பலி
மணலூர்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
மணலூர்பேட்டை,
மணலூர்பேட்டை அருகே வேளாக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 35). அதே ஊரை சேர்ந்தவர் பாஸ்கர் (40). தொழிலாளிகளான இவர்கள் 2 பேரும் அரகண்டநல்லூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் மூட்டை தூக்கும் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். திருக்கோவிலூர்- திருவண்ணாமலை சாலையில் சடைக்கட்டி கிராமம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்த தடுப்பு கட்டை மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மூர்த்தி சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், பழனிச்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.