டெம்போ மோதி தொழிலாளி பலி
திருவட்டார் அருகே டெம்போ மோதி தொழிலாளி பலியானார்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே டெம்போ மோதி தொழிலாளி பலியானார்.
திருவட்டார் அருகே உள்ள ஏற்றக்கோடு சரல்விளையை சேர்ந்தவர் நாகர்பிள்ளை (வயது 72), தச்சு தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலையில் வேலை முடிந்து ஆற்றூர் சந்திப்பில் இருந்து புளியமூடு பகுதிக்கு நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி டெம்போ நாகர்பிள்ளை மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆற்றூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கலியலூர் காட்டாத்துறை பகுதியை சேர்ந்த மினி டெம்போ டிரைவர் ஆல்பின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.