அருமனை அருகேடெம்போ மோதி தொழிலாளி பலி


அருமனை அருகேடெம்போ மோதி தொழிலாளி பலி
x

அருமனை அருகேடெம்போ மோதி தொழிலாளி பலியானார்.

கன்னியாகுமரி

அருமனை:

அருமனை அருகே மஞ்சாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 60). பெயிண்டரான இவர் நேற்று காலை உத்திரங்கோடு சந்திப்பில் மீன் வாங்கி விட்டு வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

அப்போது அந்த வழியாக வந்த டெம்போ எதிர்பாராதவிதமாக ஸ்ரீகுமார் மீது மோதியது. இந்த விபத்தில் கீழே விழுந்த அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story