வேன் மோதி தொழிலாளி பலி
வேன் மோதி தொழிலாளி பலியானார்.
விருதுநகர்
ஆலங்குளம்,
ஆலங்குளத்தை சேர்ந்தவர் ராஜா மகன் அசோக் (வயது18). இவர் பால் கறக்கும் தொழில் செய்து வந்தார். இவர் வெம்பக்கோட்டையில் இருந்து ஆலங்குளத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார். அப்போது கே.பாரைப்பட்டி விலக்கில் வரும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
இதில் அசோக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசோக்கின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story