வாகனம் மோதி தொழிலாளி பலி


வாகனம் மோதி தொழிலாளி பலி
x

மானூர் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.

திருநெல்வேலி

மானூர்:

மேலக்கடையநல்லூரைச் சேர்ந்த பரமசிவன் மகன் துரை (வயது 40). இவர் நெல்லை தச்சநல்லூர் நல்மேய்ப்பர் நகர் 10-வது தெருவில் தங்கி இருந்து தச்சு தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு அவர் தனது மோட்டார் சைக்கிளில் நெல்லை- சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

மானூர் அருகே பல்லிக்கோட்டை விலக்கு வடபுறம் சென்றபோது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட துரை சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இந்த விபத்து குறித்து மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து சரக்கு வாகனத்தின் டிரைவர் காவலாகுறிச்சியை சேர்ந்த அஜித்குமார் (30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story