தொழிலாளி கொலை; உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக போராட்டம்


தொழிலாளி கொலை; உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக போராட்டம்
x

நெல்லை அருகே தொழிலாளி கொலையில் உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பு நாடார் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 58). இறைச்சி கடை தொழிலாளி. கடந்த மாதம் 26-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீசார் மெத்தனமாக செயல்பட்டதை கண்டித்து மாயாண்டி உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர். மேலும் மாயாண்டி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று 3-வது நாளாக கரையிருப்பு கிராமத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக மாயாண்டி உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் இன்று (திங்கட்கிழமை) கலெக்டரிடம் முறையிட இருப்பதாக கூறிஉள்ளனர்.


Next Story