குளத்தில் மர்மமான முறையில் செத்து மிதந்த தொழிலாளி
செஞ்சி அருகே குளத்தில் மர்மமான முறையில் செத்து மிதந்த தொழிலாளி கொலையா? போலீசார் விசாரணை
விழுப்புரம்
செஞ்சி
செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர் ஆதிமூலம் மகன் பழனி(வயது 50) தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் பழனியை காணவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை பரதன்தாங்கல் கிராமத்தில் உள்ள குளத்தில் பழனி பிணமாக மிதந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பழனியின் இறப்புக்கான காரணம் தொியவில்லை? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து உடலை குளத்தில் வீசி சென்றனரா? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story