கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராசிபுரம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
ராசிபுரம்:
கத்தியால் குத்தினார்
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபு(வயது 28), கூலித்தொழிலாளி. இவர் தனது சித்தி மகனான ராசிபுரத்தை சேர்ந்த முரளி(38) என்பவருக்கு கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு முரளியிடம் கொடுத்த பணத்தை பிரபு திருப்பிக் கேட்டார். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரபு கத்தியால் முரளியை குத்தினார். இதில் அவர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
5 ஆண்டுகள் சிறை
இதுகுறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு விசாரணை ராசிபுரம் சார்பு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் முரளியை கொலை செய்ய முயன்ற வழக்கில் பிரபுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீனதயாளன் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சரவணன் ஆஜராகினார். இதையடுத்து பிரபுவை ராசிபுரம் போலீசார் கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றனர்.